தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு - Chennai High Court order

சென்னை: ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை கோரி தொடரப்பட்ட அனைத்து வழக்குகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கு
ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கு

By

Published : Jun 25, 2020, 2:38 PM IST

கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நடப்பு கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன.

ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்துகொள்ள மாணவ, மாணவியர்கள் முயற்சிக்கும்போது ஆபாச இணையதளங்களால் அவர்களின் கவனம் சிதைவதால் அந்த இணைய தளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இதேபோல், ஆன்லைன் வகுப்புகளை மொபைல், லேப்டாப் மூலம் பார்ப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், அதனால் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் விமல் மோகன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் அந்த மனுவில் மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை முதல்வர் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட வேண்டுமென மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு தடைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூன் 25) விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த விதிகளும் வகுக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் வகுப்புகளை முறை படுத்துவதற்கு விதிகள் வகுப்பது தொடர்பாக உள்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கருத்துகளை தெரிவிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

அதேபோல், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து எழும்பூர் கண் மருத்துவமனை முதல்வர் அறிக்கை அளிக்க மேலும் ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கறிஞர் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய அனைத்து வழக்குகளிலும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க...‘ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கி’ - ஸ்டாலின் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details