தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடநாடு: மேல் விசாரணைக்குத் தடை கோரி வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரி சாட்சி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார். இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 24) விசாரணைக்கு வருகிறது.

MHC
MHC

By

Published : Aug 24, 2021, 7:23 AM IST

Updated : Aug 24, 2021, 10:23 AM IST

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டுள்ள கோயம்புத்தூரைச் சேர்ந்த ரவி என்பவர் தாக்கல்செய்த மனுவில், கோடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கனகராஜ் என்பவரைத் தனக்குத் தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தவுள்ளதால், தங்கள் விருப்பப்படி வாக்குமூலம் அளிக்கும்படி, பலதரப்பிலிருந்தும் தனக்கு மிரட்டல்கள் வருவதாகத் தெரிவித்துள்ளார். அரசுத் தரப்பில் 41 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு முடித்த நிலையில், இதுவரை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகளிடம் விசாரணை இன்னும் தொடங்கவில்லை.

MHC

இந்நிலையில் நீதிமன்ற அனுமதியின்றி மேல் விசாரணை நடத்திவருவதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கை விரைந்து முடிக்கும்படி விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிடுவதுடன், மேல் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated : Aug 24, 2021, 10:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details