தமிழ்நாட்டில், நடப்பு 2020-21ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவ - மாணவியருக்கான காலணிகள் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு பாடநூல் கழகம், கடந்த மார்ச் மாதம் டெண்டர் கோரியது. இந்த டெண்டருக்கு தேவையான அனைத்தையும் ஆவணங்களுடன் விண்ணப்பித்தும், எந்த காரணமும் தெரிவிக்காமல் தங்கள் நிறுவனத்தை தகுதி நீக்கம் செய்து தமிழ்நாடு பாடநூல் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறி, ஹரியானாவைச் சேர்ந்த பி.என்.ஜி பேஷன் கியர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மாணவர்களுக்கு காலணிகள் கொள்முதல் டெண்டர்: தமிழ்நாடு பாடநூல் கழகம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு! - restrain allotment of school student
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலணிகள் கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டரை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் கழகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "குறைந்த தொகையை குறிப்பிட்டிருந்த தங்கள் நிறுவனத்தை தகுதி நீக்கம் செய்து விட்டு, பேட்டா நிறுவனத்துக்கும், பவர்டெக் எலெக்ட்ரோ இன்ப்ரா என்ற நிறுவனத்துக்கும் பணிகள் வழங்க உள்ளனர், அதற்கு தடை விதித்து, தங்களுக்கு டெண்டர் ஒதுக்க வேண்டும்" என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து, இந்த மனு தொடர்பாக பதிலளிக்கும்படி, தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.