தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா அதிகரிக்கும் நிலையில் கோவில்களில் மீண்டும் கட்டுப்பாடு - chennai news

சென்னை: கரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னை கோவில்
கரோனா அதிகரிக்கும் நிலையில் கோவில்களில் மீண்டும் கட்டுப்பாடு

By

Published : Mar 21, 2021, 6:30 PM IST

கரோனா பரவல், கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு வித கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அறநிலையத்துணை ஆணையர் அனைத்து கோயில்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், திருக்கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், கைகள் சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலையான விழிப்புணர்வு வழிக்காட்டு நடைமுறைகள் முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சீரான இடைவெளியில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'பாஜக அரசை தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள்’ - வைகோ கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details