சென்னை:ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் தேதி காவலர் வீர வணக்க நாள் காவல்துறை சார்பில் அனுசரிக்கப்படுகிறது. ஒரு வாரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பணியின்போது வீர மரணம் அடைந்த காவல் துறையினருக்கு காவல்துறை சார்பில் வீர வணக்கம் செலுத்தி மரியாதை செய்யப்படும்.
அந்த வகையில் நேற்று (அக்.21) காவலர் வீர வணக்க வாரம் நிகழ்ச்சி தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று (அக்.2) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே காவலர் வீர வணக்க வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உயிரிழந்த காவல் துறையினரின் புகைப்படங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.