சென்னை: கலைவாணர் அரங்கில் அமைந்துள்ள மண்டபத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இதில் இன்று வரவு-செலவுத் திட்ட அறிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
முன்னதாக, அவை தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கல் குறிப்புத் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதன்படி, ஒன்பது முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அவர்கள் வருமாறு:
- ஆ. தங்கராசு
- க.ந. இராமச்சந்திரன்
- கே. பண்ணை சேதுராம்
- புலவர் பூ.ம. செங்குட்டுவன்
- கி. அய்யாறு வாண்டையார்
- ம. விஜயசாரதி
- நன்னிலம் அ. கலையரசன்
- இ. மதுசூதனன்
- திண்டிவனம் கே. இராமமூர்த்தி