தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேடவாக்கத்தில் தேங்கும் மழை நீர்!... எப்போது தான் தீர்வு?.. அவதியில் மக்கள்! - rainwater stagnation in Vadukkapattu area

water stagnant at Vadukkapattu area: மேடவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வட ரவி பிரதான சாலையில், சிறு மழைக்கே மழை நீரானாது தேங்கி வருவதால் இதனை உடனடியாக சீர் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேடவாக்கத்தில் தேங்கும் மழை நீர்
மேடவாக்கத்தில் தேங்கும் மழை நீர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 12:15 PM IST

சென்னையில்எப்போது மழை பெய்தாலும் அதிகமாக பாதிக்கப்படுவது, வேளச்சேரி, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் தான். தற்போது, நேற்று (செப். 24) இரவு பெய்த மழைக்கு மேடவாக்கம் வடக்குப்பட்டு பகுதியில், மழை நீரானது தேங்கி காணப்படுகிறது. இது அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் பிரச்சினையாக உருவாக்கி உள்ளது.

சென்னைக்கு அருகில் இருக்கும், கிராம ஊராட்சியை சேர்ந்த பகுதி மேடவாக்கம். இது சுமார் 52 சிறு சிறு பகுதிகளை இணைத்துள்ளது. இந்த மேடவாக்கத்திற்கு உட்பட்ட பகுதியான வடுக்கப்பட்டு பகுதியில், முறையான மழைநீர் வடிகால், மற்றும் தரமான சாலைகள் இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், இந்த வடுக்கப்பட்டு பகுதியிலுள்ள ரவி பிரதான சாலையில் தான் மழைநீர் தேங்கும் பிரச்சினை தொடர் கதையாக இருந்து வருகிறதாக அம்மக்கள் வேதனையடைகின்றனர்.

இதையும் படிங்க: "சம வேலைக்கு சம ஊதியம்.." இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேறுமா? தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!

அந்த குடியிருப்பு பகுதியில் வசிக்கும் நபர்களுக்கு மேடவாக்கம் மற்றும் பள்ளிக்கரனை இணைக்கும் முக்கிய பாதையாக இந்த ரவி சாலை உள்ளது. இந்த சாலையில் தண்ணீர் தேங்குவதால் முறையான வசதிகள் இல்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் கார்த்திக் சந்தோஷ் கூறியதாவது, "மேடவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்குப்பட்டு பகுதியில் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மழைநீர் பிரச்சினையை நாங்கள் சந்தித்து வருகிறோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் பிரச்சினை தீவிரமைடந்து உள்ளது. இந்த வடக்குபட்டு பகுதியில் இருக்கும் ரவி பிரதான சாலை ஒரு முக்கிய சாலையாக இருந்து வருகிறது. மேலும் இந்த சாலையில், பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இதனால் பள்ளி குழந்தைகள் பள்ளி செல்வதில் மிகவும் சீரமம் அடைந்து வருகிறார்கள்.

அதேப்போல், சாலை சரி இல்லாத காரணத்தினால் பள்ளிக்கு அழைத்து செல்லும் வாகனங்களால், மிகவும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது. தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், இரண்டு நாட்களாக இந்த பகுதியில் மழை நீரனாது தேங்கி உள்ளது. மேலும் வயதானவர்கள் இந்த பகுதியில் நடந்து செல்ல முடியவில்லை. அவ்வபோது, அவர்கள் கீழே விழுந்தும் உள்ளார்கள்.

தண்ணீர் செல்வதற்கு முறையான மழை நீர் வடிகால்கள் இல்லை. இது குறித்து, மேடவாக்கம் ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை எங்கள் பிரச்சினைகளை கூறி விட்டோம். ஆனால் கூறும் சமயத்தில் மட்டும் அதாவது, 2-3 நாட்கள் கழித்து டீசல் மோட்டார்களை வைத்து தண்ணீரை அப்புறப்படுத்துகிறார்கள். அதன் பின் மழை பெய்தால் மீண்டும் இப்பிரச்சினை தொடர் கதையாக மாறுகிறது.

இந்த மேடவாக்கம் பகுதியானது, தாம்பரம் மாநகராட்சியிலும் சேரவில்லை, சென்னை மாநகராட்சியிலும் சேரவில்லை, தனித்து ஒரு தீவு போல் எங்களுக்கு இருக்கிறது. இந்த பிரச்சினை குறித்து நாங்கள் பல முறை புகார் கொடுத்துவிட்டோம். ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை" என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில் பல வருடங்களாக தொடர்ந்து வரும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!

ABOUT THE AUTHOR

...view details