கரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாட்டில் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கடந்த ஐந்து மாதங்கள் மாநிலத்தின் பொருளாதாரம் மந்தநிலையுடன், பின்தங்கிய நிலையில் உள்ளது.
இதையடுத்து கரோனா கால பொருளாதாரத்தை மீட்பதற்காக, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு கரோனா காலத்தில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை மீட்பதற்கான வாய்ப்புகள், வழிமுறைகளின் அடிப்படையில் ஆலோசனை நடத்தியது.
கடந்த மூன்று மாதங்களாக இக்குழுவினரால் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து திட்டங்களை தயார் செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசிடம் வழங்க வேண்டிய பரிந்துரைகளை ரங்கராஜன் குழு இறுதி செய்து, அதன் அறிக்கையை நிதித்துறை செயலாளரிடம் அளித்துள்ளது.
இதையும் படிங்க: எச்சரிக்கை மணியடிக்கும் ஜி.டி.பி. வீழ்ச்சி - ரகுராம் ராஜன் கவலை