சென்னை: ஆர்எஸ்எஸ், பாஜகவின் முன்னோடி தலைவர் தீனதயாள் உபாத்தியாயா பெயரில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.
தீனதயாள் உபாத்தியாயாவின் கொள்கைகளை சமூகத்திற்கு கொண்டு செல்லவும் அவருடைய கொள்கைகள் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியுடன் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு இருக்கை தொடங்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி இருக்கை
அதன் பின்னர், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக தேசிய அளவிலான கருத்தரங்கை ஆன்லைன் மூலமாக நடத்தியுள்ளது.