தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Chennai Flood: வெள்ளத்தில் சிக்கித்தவித்தவர்களை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர்

வீட்டைச் சுற்றி மழை நீர் சூழ்ந்ததால் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் வீட்டில் தவித்துக் கொண்டிருந்த குடும்பத்தினரை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் பத்திரமாக மீட்டு முகாமில் தங்க வைத்தனர்.

flood affected place  chennai floods  heavy rain in chennai  flood affected area in chennai  rescue team rescued family from flood affected place  வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட தீயணைப்புத் துறையினர்  சென்னை வெள்ளம்  சென்னை வெள்ள பாதிப்புகள்  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்பு முகாம்
வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பு

By

Published : Dec 1, 2021, 2:49 PM IST

சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால், பல்வேறு குடியிருப்புப் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாத நிலையில் உள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பு

இந்நிலையில் மழை நீர் சூழப்பட்டப் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை, தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் ரப்பர் படகுகள் மூலம் மீட்டு முகாம்களில் தங்க வைக்கின்றனர்.

ரப்பர் படகு மூலம் மீட்பு

மழை நின்று இரண்டு நாள்களாகியும், சில பகுதிகளில் மழை நீர் வடியாமல் உள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அந்த வகையில் மேற்கு தாம்பரம், ராதா நகர்ப் பகுதியில் குடியிருப்பைச் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது.

மீட்பு முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்ட குடும்பத்தினர்

இந்நிலையில் அப்பகுதியில் மின்சாரம் இல்லாமலும், அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமலும், வீட்டை விட்டு வெளியேற முடியாமலும் இரண்டு நாள்களாக தவித்துக்கொண்டிருந்த குடும்பத்தை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் ரப்பர் படகு மூலம் மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர்.

இதையும் படிங்க: இடிந்து விழுந்த சுரங்கம்... தண்ணீரே உணவு... 4 நாள்களுக்கு பின் உயிருடன் திரும்பிய தொழிலாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details