தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை வெள்ளத்தில் 50 அடி பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள்.. 4வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்! - ditch trapped workers

Velachery Rescue Operation: சென்னை வேளச்சேரியில் 50 அடி பள்ளத்தில் விழுந்த இரண்டு தொழிலாளர்களை மீட்கும் பணி இன்று நான்காவது நாளாக தொடரும் நிலையில், தற்போது மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் களமிறங்கி உள்ளனர்.

rescue operation of ditch trapped workers continues
பள்ளத்தில் விழுந்த தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 9:49 PM IST

பள்ளத்தில் விழுந்த தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை இடைவிடாமல் தொடர்ந்து கனமழையானது பெய்தது. இதன் காரணமாக சென்னை வேளச்சேரி, மடிப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் மழைநீர் சூழ்ந்து கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், சென்னை வேளச்சேரி பிரதான சாலையான 5 பர்லாங் சாலையில் தனியார் கேஸ் பங்க் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் அருகே கேஸ் பங்கிற்கு சொந்தமான அலுவலக கட்டிடம் ஒன்றும் இருந்துள்ளது. இந்த நிலையில், இந்த கேஸ் பங்கிற்கு ஒட்டியவாறு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்கு பெரிய அளவில் 50 அடி பள்ளம் தோண்டப்பட்டு, பேஸ்மெண்ட் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக கேஸ் பங்கை ஒட்டியவாறு தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் மண் சரிவு ஏற்பட்டு, கேஸ் பங்கிற்கு சொந்தமான அலுவலக கட்டிடம் அந்த 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியது. இந்த விபத்தில் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான கண்டைனர் ஒன்றும், அந்த பள்ளத்தில் விழுந்துள்ளது.

இந்த விபத்தில் கேஸ் பங்க் ஊழியர்கள் உட்பட கட்டுமான பணியில் இருந்த ஐந்து பேர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். பின்னர், இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, 50 அடி பள்ளத்தில் சிக்கிக்கொண்ட மூவரை மீட்டு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் பள்ளத்தில் சிக்கிய மீதி இருவரை மீட்க முடியாமல் போனது. தொடர்ந்து கன மழை பெய்து பள்ளத்திற்குள் தண்ணீர் தேங்கியதாலும், மண் சரிவு ஏற்பட்டதாலும் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டது. அதையடுத்து, தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு உள்ளிட்ட உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த போதும், மண் சரிவு காரணமாக பள்ளத்தில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபடாததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகள், அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு, எவ்வாறு மீட்பு பணியில் ஈடுபடலாம் என ஆலோசனைகள் மேற்கொண்டனர். ஆனால், தொடர்ந்து மழை பெய்து வந்தாலும், அந்த பள்ளம் முழுவதும் தண்ணீர் தேங்கி விட்டதாலும் மீட்பு பணியில் ஈடுபடாமல் இருந்துள்ளனர்.

இதையடுத்து விசாரணையில் விபத்தில் சிக்கியது கேஸ் பங்கில் பணிபுரிந்து வரும் வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த நரேஷ், கட்டுமான மேற்பார்வையாளர் ஜெயசீலன் என்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, இது குறித்து அவர்களின் குடும்பத்தினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது சம்பவ இடத்திற்கு வந்த இருவரின் குடும்பத்தினரும் கதறி அழுதவாறே உடனடியாக இருவரையும் மீட்க வேண்டுமென கோரிக்கை விடுத்து, அங்கேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக அப்பகுதி முழுவதும் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினரும், மீட்பு படையினரும் ஈடுபட்டு வந்ததால், கடந்த இரண்டு நாட்களாக எந்த ஒரு மீட்பு பணியிலும் அதிகாரிகள் ஈடுபடவில்லை. இதையடுத்து, இன்று (டிச.07) காலை முதல் 50 அடி பள்ளத்தில் தேங்கி இருக்கும் வெள்ள நீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சுமார் 10க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் மூலம் பள்ளத்தில் தேங்கி இருக்கும் மழைநீரை அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும், அந்த 50 படி பள்ளத்தில் அதிகப்படியான சேறு இருப்பதால், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு, அதிநவீன உபகரணங்களும் கொண்டுவரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தற்போது தொடர்ந்து மீட்பு பணியானது நடைபெற்று வருகிறது. இன்று இரவுக்குள் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் சேற்றில் சிக்கி உள்ள இருவரையும் மீட்டு விடுவார்கள் என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் 50 அடி பள்ளத்தில் சிக்கிய இருவரும், மழை நீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கக்கூடும் எனவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் அப்பகுதியில் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:"மூன்று நாளாக மின்சாரம் இல்லை" - இருளில் தவிக்கும் கொரட்டூர்

ABOUT THE AUTHOR

...view details