சென்னை:அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இந்தியாவிலேயே முதன் முறையாக கை அறுவை சிகிச்சை உயர் சிறப்பு மேற்படிப்பு மற்றும் பல்வேறு மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளை இன்று (நவ.29) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, கை அறுவை சிகிச்சை சிறப்பு பிரிவை பார்வையிட்டு விட்டு, 3ஆவது தளத்தில் இருந்து தரைத்தளத்திற்கு செல்ல லிப்டில் ஏறினார். அப்போது அமைச்சருடன், மருத்துவர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்தனர்.
லிப்டில் சிக்கிய அமைச்சர்: இந்தநிலையில் திடீரென லிப்ட் பாதியில் நின்றுவிட்டது. இதனால், லிப்ட்டிக்குள் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் சிக்கினர். இதனையடுத்து, லிப்ட் ஆப்ரேட்டர் லிப்ட்டை சரிசெய்ய முயன்றார். இருந்தபோதும், நேரமானதால் பாதியில் நின்ற லிப்ட் கதவு திறக்கப்பட்டு அவசரகால வழியாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் உட்பட மருத்துவர்களையும் அங்கிருந்தவர்கள் மீட்டனர். இதனால், ஸ்டான்லி மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தூசு தட்டப்படும் சொத்துகுவிப்பு வழக்கு: திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு நீதிமன்றம் சம்மன்!