தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல நூறு கோடி மதிப்புடைய 14 பழங்கால சிலைகள் மீட்பு - சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை - ancient idols stole

வெளிநாடுகளுக்கு கடத்தவிருந்த பலநூறு கோடி மதிப்புடைய 14 பழங்கால சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்து, சிலைகளை வைத்திருந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல நூறு கோடி மதிப்புடைய 14 பழங்கால சிலைகள் மீட்பு -  சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை
பல நூறு கோடி மதிப்புடைய 14 பழங்கால சிலைகள் மீட்பு - சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை

By

Published : Jul 22, 2022, 3:26 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் இருந்து திருடுபோன பழங்கால சிலைகள் மற்றும் தொன்மையான பொருட்கள் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு, சிலைகளை மீட்கும் பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் சிவாஜி நகரில் உள்ள ஆர்ட் வில்லேஜ் என்ற கடையில் பழங்கால சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவைகளை வெளிநாடுகளுக்கு விற்க அல்லது கடத்த திட்டமிட்டுள்ளதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பல நூறு கோடி மதிப்புடைய பழங்கால சிலைகள்

இவ்வாறு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், ஆர்ட் வில்லேஜ் என்ற கடையின் உரிமையாளர் கணபதி, ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு பழங்கால சிலைகள் எனக்கூறி இந்திய தொல்லியல் துறையிடம் வெளிநாட்டிற்கு அனுப்ப அனுமதி கேட்டு சில சிலைகளுக்காக விண்ணப்பம் அனுப்பியுள்ளார்.

ஆனால், சிலைகளின் தொன்மையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி இந்திய தொல்லியல் துறை அவரின் விண்ணப்பத்தை நிராகரித்திருந்தது தெரிய வந்துள்ளது. இதனை உறுதி செய்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், சம்பவ இடத்தில் சோதனை மேற்கொள்ள ஏடிஎஸ்பி தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படை அமைத்தனர்.

பல நூறு கோடி மதிப்புடைய பழங்கால சிலைகள்

இதனைத் தொடர்ந்து தனிப்படையினர் மாவட்ட நீதிமன்றத்தில் தேடுதல் வாரண்ட் அனுமதி பெற்று, ஆர்ட் வில்லேஜ் என்ற கடையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ரகசிய இடத்தில் மறைத்து வைத்திருந்த பெருமாள், அப்பர், ரிஷப தேவர், சிவகாமி அம்மன், சுந்தரர், மாணிக்கவாசகர், குட்டி நந்தி உள்பட 14 பழங்கால சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் ஆர்ட் வில்லேஜ் உரிமையாளர் கணபதியிடம் அங்கிருந்த சிலைகளுக்கு உண்டான உரிய ஆவணங்கள் இல்லாததால், அவரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல நூறு கோடி மதிப்புடைய பழங்கால சிலைகள்

குறிப்பாக பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் எந்த கோயிலுக்குச் சொந்தமானது எனவும், சிலைகள் யாரால் கடத்தப்பட்டது என்பது குறித்தும், சிலைகளின் தொன்மை குறித்தும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், கைப்பற்றப்பட்ட சிலைகளின் மதிப்பு பல நூறு கோடி ரூபாயைத் தாண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கழிவறைக்கு குழி தோண்டியபோது கிடைத்த தங்க நாணயங்கள் - சில தொழிலாளர்கள் தலைமறைவு!

ABOUT THE AUTHOR

...view details