மாஞ்சா நூலில் சிக்கி உயிருக்கு போராடிய காகம் மீட்பு சென்னை: போரூர் அடுத்த காரம்பாக்கம், பிராமணர் தெரு பகுதியில் 25 அடி உயர தென்னை மரத்தில் மாஞ்சா நூலில் சிக்கி கொண்டு காகம் ஒன்று உயிருக்கு நீண்ட நேரமாக உயிருக்கு போராடி கொண்டிருந்தது.
அந்த காகத்தின் மேலே பத்துக்கு மேற்பட்ட காகங்கள் ஒன்று சேர்ந்து கரைந்தது.
இதனை அறிந்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக ராமாபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் 25 அடி உயர தென்னை மரத்தின் மீது ஏணியை போட்டு லாபகமாக மேலே ஏறி நூலை அறுத்து விட்டு காகத்தை மீட்டனர்.
அதற்கு காயம் ஏற்பட்டதால் தண்ணீர் கொடுக்கப்பட்டு பின் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: video: மருத்துவரின் ஆலோசனையின்றி உடல் எடையை குறைக்கும் மருந்துகள் பயன்படுத்துவது ஆபத்து!