சென்னை:தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நந்தகுமார், முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், ’தமிழ்நாட்டில் சுயநிதி அடிப்படையில் மாநில அரசின் பெரும் பண சுமையையும், பணி சுமையையும் குறைத்து பலருக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளது. பல கோடிக்கணக்கான மாணவர்களுக்கு தரமான கல்வி அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் நர்சரி, பிரைமரி,மெட்ரிக், மேல்நிலை, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், ஐசிஎஸ்இ பள்ளிகள் , கேம்பிரிட்ஜ் பள்ளிகள், ஐ.பி. பள்ளிகள், சுயநிதி அடிப்படையிலான உயர்நிலை மேல்நிலை பள்ளிகள் முறையே சுமார் 20 ஆயிரம் பள்ளிகள், 50 ஆயிரம் பள்ளி வாகனங்கள் இயங்கிவருகின்றன.
பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் என பள்ளிகளின் அங்கீகாரம், கல்விக்கட்டணம் நிர்ணயித்தல், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் வழங்குதல், உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட பல தேவைகளுக்கு நாங்கள் ஒவ்வொரு அலுவலகத்திற்கு அலைய வேண்டி வருகிறது.