சென்னை: மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் இன்று காலை (ஜூலை 4) சட்ட விரோதமாக ஆட்டோ ரேஸ் நடத்தப்பட்டது. இதில் ஐந்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், முப்பதுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பங்கேற்றன.
கலந்து கொள்ளும் ஆட்டோக்கள் மீது ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம்வரை பந்தயத் தொகையாக செலுத்தப்பட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ ரேஸில், ஆட்டோ - லாரி மோதிக் கொண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.