தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க மாநிலக் கல்வி ஆணையம் அமைக்க கோரிக்கை! - மாநிலக் கல்விக் கொள்கை

சென்னை: தமிழ்நாட்டிற்கென மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்குவதற்குரிய மாநிலக் கல்வி ஆணையம் அமைந்திட உரிய ஆணையத்தை ஸ்டாலின் பதவி ஏற்ற முதல் நாளே பிறப்பிக்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தி உள்ளது.

dmk
dmk

By

Published : May 5, 2021, 4:03 PM IST

இதுதொடர்பாக பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "தாங்கள் பெற்றிருக்கும் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தனது மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாட்டைக் கடந்து அகில இந்திய அளவில் அரசியல் களம் காண, போடப்பட்டிருக்கும் அடித்தளமாகவே தங்களின் தலைமையில் திமுக பெற்றுள்ள வெற்றியைப் பார்க்கிறோம். அகில இந்திய அளவில் சர்வாதிகாரத்திற்கு வழி வகுத்திடாமல், மக்களாட்சி மாண்பிற்கு உட்பட்ட சட்டத்தின் ஆட்சி அமைந்திட தொடர் பணியைத் தாங்கள் ஆற்ற வேண்டியுள்ளதை கல்வியாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

மாநிலத்தில் பல்வேறு சிக்கல்கள் தங்களின் உடனடிக் கவனம் பெற வேண்டிய அவசியம் இருந்தாலும், அவற்றுள் சுகாதாரமும், கல்வியும் போர்க்கால அடிப்படையில் கவனம் பெற வேண்டிய துறைகளாக உள்ளன.

ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்க வாய்ப்புள்ள இந்த இரண்டு துறைகளிலும், பணி நியமனம், பணி மாறுதல் தொடங்கி பலவற்றிக்கும் ஊழலுக்கு இடம் தராத, வெளிப் படைத்தன்மையுடன் அனைத்து செயல்பாடுகளும் நடந்திட உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

தாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அடுத்தக் கல்வி ஆண்டு தொடங்குகிறது. மாணவர்கள் மன உளைச்சல் இல்லாமல் மகிழ்ச்சியாக, கல்வி ஆண்டு தொடங்கவும், தேசியக் கல்விக் கொள்கை 2020ன் பேராபத்திலிருந்து நம் மாநிலத்தைக் காத்திட, மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.

அதற்குரிய மாநிலக் கல்வி ஆணையம் அமைந்திட உரிய ஆணையைத் தாங்கள் பதவி ஏற்ற முதல் நாளே பிறப்பிக்க வேண்டும் என்று இந்தியாவே எதிர்பார்க்கிறது. ஒவ்வொரு பெற்றோரும், தன் குழந்தையின் வாழ்க்கையில் ஒளி ஏற்றப் போகும் முதல்வராகத் தங்களைப் பார்க்கின்றனர்.

மாநில உரிமைகளைக் காத்து, தமிழ் நாடு இந்தியாவிற்கே முன் உதாரணமாகத் திகழ்ந்திடும் வகையில் நல்லாட்சியை வழங்கிட நெஞ்சு நிறைந்த வாழ்த்துகள்" என அதில் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details