தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநருக்கு எதிராக கண்டன தீர்மானத்தை சென்னை மாநகராட்சி மன்றத்தில் நிறைவேற்றக்கோரிக்கை - tn governor ravi

தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு எதிராக கண்டன தீர்மானத்தை சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என மதிமுக மாமன்ற உறுப்பினர் ஜீவன் கோரிக்கை வைத்துள்ளார்.

Request to pass censure resolution against Governor in Chennai Municipal Council
Request to pass censure resolution against Governor in Chennai Municipal Council

By

Published : Jan 30, 2023, 4:07 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் தலைமையில் இன்று நடைபெற்றது. மாமன்றக் கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் பேசிய மதிமுக மாமன்ற உறுப்பினர் ஜீவன், ஆளுநர் ரவியைக் கண்டித்து சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இது தொடர்பாக நேரமில்லா நேரத்தில் பேசிய மாமன்ற உறுப்பினர் ஜீவன், 'கடந்த ஜனவரி 9ஆம் தேதி தமிழ்நாடு என்ற பெயரை ஆளுநர் சட்டமன்றத்தில் பேச மறுத்தது கண்டனத்திற்குரியது. அண்ணா, அம்பேத்கர், பெரியார் உள்ளிட்டோரின் பெயரை சொன்னால் நாக்கு தீட்டு பட்டுவிடும் என்பதை எண்ணி சொல்லாமல் இருந்திருக்கிறார், ஆளுநர் ரவி' என மன்றக் கூட்டத்தில் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

மேலும் சென்னை மாநகராட்சி சார்பில் ஆளுநருக்கு எதிரான கண்டன தீர்மானத்தை மேயர் கொண்டு வர வேண்டும் என்றும்; பகுத்தறிவு மண்ணை சீண்டி பார்க்கும் எண்ணம் இனி எந்த ஆளுநருக்கும் தமிழ்நாட்டில் வராத வகையில் கண்டன தீர்மானத்தை மேயர் நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய ஜீவன், 'மாமன்றக் கூட்டத்தை தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும் என்றும்; ஒவ்வொரு வார்டு அலுவலகத்திலும் வார்டு உறுப்பினர் தேசியக்கொடியினை ஏற்றும் வகையில் கொடிக்கம்பம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்' என கோரிக்கைகளை முன் வைத்தார்.

மதிமுக மாமன்ற உறுப்பினர் ஜீவன் கோரிக்கைகளுக்குப் பதில் அளித்துப் பேசிய மேயர் பிரியா, 'அடுத்த மாமன்றக் கூட்டம் என்பது தமிழ்த்தாய் வாழ்த்துடன் தான் கூட்டம் தொடங்கும். வார்டு அலுவலகங்களில் அனைத்து உறுப்பினர்களும் தேசியக்கொடி ஏற்றும் வகையில் கொடிக்கம்பங்களை அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்' எனவும் தெரிவித்தார். மேலும் சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு, ஆளுநருக்கு எதிராக மாநகராட்சி மாமன்றக்கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்கப்படும் என மேயர் பிரியா தகவல் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details