தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கைதி கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மனு! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதி கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் தேவேந்திர குல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கைதி கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை
கைதி கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை

By

Published : Apr 24, 2021, 5:41 PM IST

கடந்த 22-ஆம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த முத்து மனோ (27) என்பவரை சக கைதிகள் கொலை செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் தேவேந்திர குல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் அதன் கூட்டமைப்பின் நிர்வாகி ரவிக்குமார் கூறியதாவது, "விசாரணைக் கைதியான முத்து மனோவை கொலை செய்யும் நோக்கத்துடன் ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் இருந்து பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுகிறது.

ஒரு கைதியை சக கைதிகள் கொலை செய்யும் அளவிற்கு சிறைச் சாலைகளில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது வருத்தமளிக்கிறது. காவல்துறையினரின் உதவியின்றி இக்கொலை சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை.

கைதி கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை!

இந்த கொலை சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இறந்த கைதியின் குடும்பத்தாருக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். தென் மாவட்டங்களில் சாதியை அடிப்படையாகக் கொண்டு காவல் துறையினர் குற்றவாளிகளுடன் சேர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்" என்றார்.

இதையும் படிங்க: சிறையில் கைதி கொலை - உறவினர்கள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details