கரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊரடங்கால் பல நாள்கள் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆகையால் மே மாதம் நான்காம் தேதி முதல் தனியார் பள்ளி அலுவலகங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், "தமிழ்நாட்டில் சுமார் 20 ஆயிரம் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. கரோனா வைரஸ் ஆட்கொல்லி நோய் உலக மக்களை மரணக்குழியில் தள்ளி வருகிறது. கரோனாவை தடுக்க வேண்டி அரசின் முயற்சிகளுக்கு தனியார் பள்ளிகள் முழு ஆதரவு அளித்து வருகின்றன.