சென்னை :தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கையில், ’தமிழக அரசு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு பணிகள் நிறைவடையாத நிலையிலும், மே 31 ஆம் தேதி தேர்வுகள் முடிந்தாலும், ஜூன் மாதம் 10 முதல் 12ஆம் தேதி வரையிலும் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறலாம் என்பதால் பள்ளி திறப்பதை சற்று தாமதப்படுத்தி ஜூன் மாதம் 20 அல்லது 27ஆம் தேதி இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
இது மிகவும் வரவேற்கத்தக்க நிகழ்வாக இருந்தாலும் ஏற்கெனவே ஜூன் மாதம் 13ஆம் தேதி முதல் விடுப்பு அளிக்கப்பட்டு ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் வீடுகளில் உள்ளனர். தொடக்கநிலை ஆசிரியர்களும் 20ஆம் தேதி முதல் விடுப்பில் செல்ல இருக்கின்றனர். அரசு இதனை மனதில் வைத்து 1-9வகுப்புகளை ஜூன் 13ஆம் தேதி முதல் அதாவது ஜூன் மாதம் திறந்து மாணவர்களுக்கு எழுத்து அறிவிப்பது மிகவும் சிறப்பாக இருக்கும்.