சென்னை:அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், “இந்தியாவில் சுகாதாரத்துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. ஆனாலும், அதற்கான பங்களிப்பை வழங்கி வரும் அரசு மருத்துவர்களுக்கு, நாட்டிலேயே மிகவும் குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கரோனா பேரிடரில் ஓய்வின்றி பணியாற்றி வரும் அரசு மருத்துவர்களின் வலிகளையும், உணர்வுகளையும் அரசு புரிந்துகொள்ள மறுப்பது தான் வேதனையாக உள்ளது. கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசிடமிருந்து இதுவரை நிவாரணம் தரப்படவில்லை. திவ்யா விவேகானந்தன் முதலமைச்சருக்கு கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்த பிறகும், கல்விக்கேற்ற அரசு வேலை வழங்கப்படவில்லை.