இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் நசிமுத்தினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்த வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் அரசு அறிவித்துள்ள குறைந்த அளவிலான பணியாளர்களை வைத்து இயக்குவது, குறைந்த அளவிலான நேரத்தில் வங்கியைத் திறப்பது உள்ளிட்ட விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும், போக்குவரத்து வசதியில்லாத பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும், இணை தொற்று, கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
கரோனா தொற்று மருத்துவ செலவுக்காக கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் செலவு செய்த பணத்தை திரும்பத் தரவேண்டும், பெருந்தொற்று காலத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க வேண்டும், கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க வேண்டும்" உள்ளிட்ட 10 முக்கியக் கோரிக்கைகளை கூட்டுறவு ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.