இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக்குலேசன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறியதாவது, "கரோனா தொற்று காலத்தில் கடந்த 7 மாதமாக பள்ளிகள் மூடி கிடப்பதால், பாடம் நடத்தாமல் மாணவர்கள் படிப்பதை மறக்காமல் இருக்க ஆன்லைன் மூலம் பாடம் நடத்தி வருகிறோம். எப்போது பள்ளி திறக்கும் என்ற எண்ணமும், சிந்தனையும் இல்லை.
நோய்த் தொற்று குறைந்து மாணவர்கள் பாதுகாப்பாக உள்ள சூழ்நிலையில்தான் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால், மாணவர்கள் கல்வி மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காகவும், ஏழை மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் கல்வி கற்பதை உறுதி செய்திட தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புத்தகங்களை வாங்கி முழுவதுமாக பாடங்களை நடத்தி காலாண்டுத் தேர்வையும் தனியார் பள்ளிகளில் நடத்தி முடித்து விட்டோம்.
டிசம்பரில் அரையாண்டு தேர்வும், ஏப்ரலில் முழு ஆண்டுத் தேர்வும் நடத்த வேண்டும். தமிழ்நாடு பாடத்திட்டத்தில் 40 விழுக்காடு பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் 1ஆம் முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பாடங்களை எவ்வளவு குறைத்துள்ளீர்கள் என்பதை தெளிவாக விளக்க வேண்டும். அரசுப்பள்ளிக்கும், தனியார் பள்ளிக்கும் காலண்டு, அரையாண்டு முழு ஆண்டு தேர்வு உண்டா? இல்லையா? அல்லது கடந்த ஆண்டுப் போல் இந்த ஆண்டும் ஆல் பாஸ் என்று அறிவிக்க போகிறீர்களா? என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும்.
முழு ஆண்டு தேர்வு உண்டா? இல்லையா? பாடச்சுமையை குறைத்துள்ளது குறித்தும், பள்ளிகள் திறப்பு சம்பந்தமாகவும் அரசாணையை வெளியிட்டு தெளிவுப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு தேர்வு பயத்தை போக்க பாடங்கள் குறைப்பு, மத்திய அரசின் வழிகாட்டுதல்படி பள்ளிகள் திறப்பு சம்பந்தமான அறிவிப்பை வெளியிட வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க:1 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு!