தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொள்ளிடம் ஆற்றின் வடக்குப்பகுதியில் புதிய தடுப்பணை குறித்த கோரிக்கையும் அமைச்சரின் பதிலும்!

சட்டப்பேரவையில் இன்று கொள்ளிடம் ஆற்றின் வடக்குப்பகுதியில் தடுப்பணை அமைப்பது குறித்த கோரிக்கையை காட்டுமன்னார்கோயில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சிந்தனைச்செல்வன் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் அரசின் நிதி ஆதாரத்தை கருத்தில் கொண்டு தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

சட்டசபை, assembly
கொள்ளிடம் ஆற்றின் வடக்குப் பகுதியில் புதிய தடுப்பணை குறித்த கோரிக்கையும் அமைச்சரின் பதிலும்.

By

Published : May 9, 2022, 3:02 PM IST


சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மாதம் 18ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கலானது. இரண்டு பட்ஜெட் மீதும் 24ஆம் தேதி வரை விவாதம் நடந்தது. அமைச்சர்கள் பதிலுரைக்குப் பிறகு சட்டப்பேரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது துறை வாரியான மானியக்கோரிக்கையை நிறைவேற்ற சட்டப்பேரவைக் கூட்டம் மே 5 முதல் நடைபெற்று வறுகிறது. இந்த சட்டபேரவைக் கூட்டம் நாளை முடிவுரும் நிலையில்,

தடுப்பணை கோரிக்கை: கொள்ளிடம் ஆற்றின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ள தார்ச்சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. எனவே, அந்த தார் சாலையை சீரமைத்து அந்தப் பகுதியில் தடுப்பணை கட்ட அரசு முன்வருமா என்று சட்டப்பேரவையில் காட்டுமன்னார்கோயில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவருமான சிந்தனைச்செல்வன் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ’அப்பகுதியில் தற்போதைய சூழலில் தனியார் நிலங்களை வாங்கி பிறகு தடுப்பு அணை கட்டுவதற்கு அரசு சார்பில் சுமார் 93 கோடி ரூபாய் அளவில் திட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, அரசின் நிதி ஆதாரத்தைக் கருத்தில் கொண்டு தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவித்தார்.

பாலம் அமைக்க பரிசீலனை: அதனைத்தொடர்ந்து பேசிய சிந்தனைச்செல்வன், ’காவனூர் கள்ளிபாளையம் அருகே ஒரு தரைப்பாலத்தை அமைத்துத்தர வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார். அதற்குப் பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ’உறுப்பினரின் கோரிக்கைக்கு ஏற்ப அந்தப் பகுதியில் பாலம் அமைக்க பரிசீலனை செய்யப்படும்’ என தெரிவித்தார்.

மேலும் ஆதிவராகனூர் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூபாய் 96.58 கோடியில் தடுப்பணை கட்டுவது அரசின் பரிசீலனையில் உள்ளது என்பதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என சட்டப்பேரவை உறுப்பினர் சிந்தனைச்செல்வன் கூறினார்.

இதையும் படிங்க:அதிமுகவைக் கைப்பற்ற யாகம் செய்தாரா சசிகலா? - நடந்தது என்ன?!

ABOUT THE AUTHOR

...view details