சென்னை: அண்ணா சாலையில் நேற்று (ஜன.28) 22 வயது பெண் மீது கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வா தலைமையில் அண்ணா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாநகராட்சிக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த செல்வா கூறுகையில், "மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் இதுபோன்ற கட்டடம் இடிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 13ஆம் தேதி இந்த கட்டடம் இடிப்பதற்கு மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் எந்த ஒரு ஆய்வும் செய்யாமல் அனுமதியை வழங்கி உள்ளனர். ஆய்வு இதனால் இளம்பெண்ணின் உயிர் பிரிந்துள்ளது. அனைவரும் சாலை வரி செலுத்துகிறோம். ஆகவே, சாலையில் செல்லும் பொழுது பாதுகாப்பு வழங்க வேண்டியது மாநகராட்சியின் கடமை.