தமிழ்நாட்டில் கரோனா நோய் தொற்றின் காரணமாக, வழக்கம் போல் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில செயலாளர் நந்தகுமார் கூறியதாவது, "தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் மாணவர்கள் சேர்க்கைக்கு அரசு அனுமதிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் கல்வி
கற்பித்திடவும், அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் 25 விழுக்காடு மாணவர்களைத் சேர்த்திடவும் அனுமதி தரவேண்டும்.