தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை! - chennai tamil news

சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

By

Published : May 17, 2021, 5:27 PM IST

Updated : May 17, 2021, 7:30 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசரை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் பேசியதாவது, " பால் வளத்துறை நலவாரியம் அமைக்க வேண்டும். பால் முகவர்களுக்கு ஆவின் நிறுவனத்துடன் நேரடி வர்த்தக தொடர்பை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்துள்ளோம்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 300 கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளார். ஆகவே, இது தொடர்பாக தற்போதைய திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவரை தேர்ந்தெடுப்பதில் மேலும் இழுபறி

Last Updated : May 17, 2021, 7:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details