சென்னை:சென்னையில் இந்த மாதத்திற்குள் முதல் ஏரியா சபா நடைபெற உள்ளதால் மாநகராட்சி அதிகாரிகளுக்கும், வார்டு உறுப்பினர்களுக்கும் ஏரியா (அ) நகரசபை கூட்டம் பற்றி முழுமையாக பயிற்சி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையில் முதல் முறையாக ஏரியா (அ) நகரசபை கூட்டம் நடத்த கடந்த மாமன்ற கூட்டத்தில் மாமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் ஒரு அதிகாரியும் அதுமட்டுமின்றி வார்டு கமிட்டி நபர்கள், ஒரு வார்டுக்கு 10 நபர்கள் என 200 வார்டிக்கு 2000 நபர்களை அந்த அந்த வார்டு கவுன்சிலர்கள் நியமித்தார்கள். அந்த விவரத்தை மாநகராட்சி அதன் இணையத்தளத்தில் (https://chennaicorporation.gov.in/gcc/AreaSabha/) வெளியிட்டது. 2000 நபர்களில் 170 மட்டுமே பெண் உள்ளனர் என்ற சர்ச்சையும் அப்போது எழுந்தது.
இது ஒருபக்கம் இருக்க இந்த மாதத்திற்குள் முதல் ஏரியா சபா நடைபெற உள்ளதால் மாநகராட்சி அதிகாரிகளுக்கும், வார்டு உறுப்பினர்களுக்கும் ஏரியா (அ) நகரசபை கூட்டம் பற்றி முழுமையாக பயிற்சி வழங்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு மக்களின் குரல் என்ற அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.