சென்னை: தாமோ அன்பரசன் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது அவர், “சென்னை புளியந்தோப்பில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்புகள் தரமில்லாமல் கட்டப்பட்டதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, கட்டுமானத்தின் தரம் குறித்து ஐஐடி வல்லுர்கள் அடங்கிய குழு ஆய்வுசெய்தது.
வல்லுநர் குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த 17ஆம் தேதி தாக்கல்செய்யப்பட்ட நிலையில், முழுமையான அறிக்கையை நாளை (செப். 29) முதலமைச்சரிடம் தாக்கல்செய்யப்படவுள்ளது.
பழய குடியிருப்புகளைப் புதுப்பிக்கும் பணி
தமிழ்நாட்டில் 30 - 40 ஆண்டுகள் பழமையான, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்ட 7,500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பழுதடைந்த நிலையில் உள்ளதால், அதே இடத்தில் குடியிருப்புகளை இடித்து மீண்டும் புதிய குடியிருப்புகள் கட்ட திட்டமிட்டுள்ளோம்.