தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரெப்கோ வங்கி மூலம் பணம் பட்டுவாடா: அதிமுக மீது புகாரளித்த வங்கி இயக்குநர் - அதிமுக மீது புகாரளித்த வங்கி இயக்குநர்

சென்னை: தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான அதிமுக ரெப்கோ வங்கி மூலம் பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்கக் கோரி அவ்வங்கியின் இயக்குநர் திருவேங்கடம் தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

ரெப்கோ வீடு நிதி நிறுவன இயக்குநர் திருவேங்கடம்
ரெப்கோ வீடு நிதி நிறுவன இயக்குநர் திருவேங்கடம்

By

Published : Mar 23, 2021, 4:16 PM IST

ரெப்கோ வீடு நிதி நிறுவன இயக்குநர் திருவேங்கடம், தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவை தலைமைச் செயலகத்திற்கு சென்று நேரில் சந்தித்துப் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் ஆளும் கட்சியான அதிமுக ரெப்கோ வங்கி மூலம் பணம் பட்டுவாடா செய்வதாகவும், அதைத் தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரெப்கோ வீடு நிதி நிறுவன இயக்குநர் திருவேங்கடம், "ரெப்கோ வங்கி, இலங்கை, பர்மா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் நலனுக்காக 50 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது அதிமுக கட்சியின் வங்கியாக மாறியுள்ளது.

ரெப்கோ வங்கியின் தலைவர் செந்தில்குமார் தேர்தலில் அதிமுக கட்சி பணம் பட்டுவாடா செய்வதற்குத் துணையாக இருக்கிறார். இவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தனிச்செயலாளர். அது மட்டுமின்றி, மேலாண் இயக்குநராக இருக்கும் இசபெல்லாவும் அதிமுகவைச் சார்ந்தவர். இதனால் பணம் பட்டுவாடா எளிதில் நடக்க வாய்ப்பு உள்ளது.

ரெப்கோ வீடு நிதி நிறுவன இயக்குநர் திருவேங்கடம்

ரெப்கோ வங்கி மூலம் செய்யும் பணப் பரிமாற்றத்தைக் கண்காணிக்க முடியாது. ரிசர்வ் வங்கியின்கீழ் செயல்படும் வங்கியாக இல்லாத காரணத்தால் பணப் பரிமாற்றத்தைத் தடுக்கவும், கண்காணிக்கவும் முடியாது" என்றார்.

இதையும் படிங்க:திருப்பூரில் ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details