தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இரு சுங்கச்சாவடிகளில் 50% கட்டணம் மட்டுமே வசூல்' - தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

சென்னை மதுரவாயல் - வாலாஜா நெடுஞ்சாலையில் உள்ள இரு சுங்கச் சாவடிகளில் 50 விழுக்காடு கட்டணம் மட்டுமே நீதிமன்ற உத்தரவுப்படி வசூலிக்கப்படுகிறது என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

By

Published : Sep 13, 2021, 6:25 PM IST

சென்னை: மதுரவாயல் - வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலையை முறையாக பராமரிக்காதது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நெடுஞ்சாலையை சீரமைக்கும் வரை சுங்கச்சாவடிகளில் 50 விழுக்காடு கட்டணம் மட்டும் வசூலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து இந்த உத்தரவு அவ்வப்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜரான தேசிய நெடுஞ்சாலை துறை வழக்கறிஞர் கார்த்திகேயன், வாலாஜா சாலையில் சாலை சீரமைப்பு பணிகள் முடிந்து விட்டதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சுங்கச் சாவடிகளில் 50 விழுக்காடு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

எனவே இந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து தலைமை நீதிபதி அமர்வு இந்த மாத இறுதியில் இந்த வழக்கு விசாரணை எடுத்து கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம்

ABOUT THE AUTHOR

...view details