தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை ஆக்கிரமிப்பை கண்டுகொள்ளாத பேரூராட்சி: களத்தில் இறங்கிய பொதுமக்கள் - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: சாலை ஆக்கிரமிப்பு குறித்து பொதுமக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்த நபரின் வீட்டின் சுற்றுச்சுவரை இடித்தனர்.

ஆக்கிரமிப்பு செய்த நபரின் வீட்டின் சுற்றுச்சுவர் இடிப்பு
ஆக்கிரமிப்பு செய்த நபரின் வீட்டின் சுற்றுச்சுவர் இடிப்பு

By

Published : Nov 18, 2020, 7:13 PM IST

சென்னை ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குள்பட்ட மகாத்மா காந்தி நகரில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் காலங்காலமாய் உபயோகித்துவந்த முக்கிய சாலையை ஒருவர் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடமும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆக்கிரமிப்பு செய்த நபரின் வீட்டின் சுற்றுச்சுவர் இடிப்பு

இதனால் பொதுமக்கள் சாலையை ஆக்கிரமித்த நபரின் வீட்டின் சுற்றுச்சுவரை தாங்களே ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு இடித்தனர்.

இதையும் படிங்க: மயிலாடுதுறை பகுதி காவிரி, பழங்காவிரி கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

ABOUT THE AUTHOR

...view details