தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிட்லப்பாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்! - சிட்லபாக்கம் ஏரி

சென்னை சிட்லப்பாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

By

Published : Jan 28, 2022, 3:47 PM IST

சென்னை: சிட்லப்பாக்கம் ஏரியை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி பொதுப்பணித்துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யப்பட்டது.

இதையடுத்து ஏரியில் இருந்து 71 அடி ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள 417 வீடுகள் உடனடியாக அகற்றப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் இன்று (ஜன 28), முதல் கட்டமாக 14 வீடுகளை இடிக்கும் பணி, பொது பணி துறை பொறியாளர் பிரபு, தாம்பரம் கோட்ட ஆட்சியர் அறிவுடைநம்பி, தாம்பரம் வட்டாட்சியர் பாலாஜி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

அப்போது அப்பகுதி பொதுமக்கள் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரங்களை சிறைபிடித்து பொதுப்பணித் துறை அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து தாம்பரம் துனை ஆணையர் குமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

பின்னர் தாம்பரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் ஆர் ராஜா மற்றும் அலுவலர்கள் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பொதுமக்கள் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் காவல்துறையினர் பொதுமக்களை அப்புறப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: விடுதலை புலிகள் இயக்கத்திற்கு நிதி சேர்த்த பெண் கைது - தேசிய புலனாய்வு முகமை பிரிவுக்கு வழக்கு மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details