சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கப்பட்டது. 2 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், மக்கள் அதிகளவில் ஒன்று கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் மருத்து வாங்க குவிந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு, நெரிசலை தவிர்க்க சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மாற்றப்பட்டது. நேற்று முதல் நேரு விளையாட்டு அரங்கில் மருந்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அங்கு பணிகள் நிறைவடையாததால், நேற்று வழக்கம் போல கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்து விற்பனை நடைபெற்றது.