தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மத சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்' - மனித உரிமை ஆணையம் - மத சுதந்திரம்

தமிழ்நாடு அரசு அலுவலர்கள், மத சுதந்திரத்தை உறுதி செய்ய அறிவுறுத்துமாறு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மனித உரிமை ஆணையம்
மனித உரிமை ஆணையம்

By

Published : Nov 9, 2021, 10:38 PM IST

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம், பண்டாரவிளை சேர்ந்த ஜான் வர்கீஸ் தனது வீட்டில் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தி வந்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த மாற்று மதத்தைச் சேர்ந்த ராஜன் சரஸ்வதி உள்ளிட்டோர் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்த மாட்டேன் எனத் தன்னை மிரட்டி எழுதி, வாங்கியதாக ஜான் வர்கீஸ் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.

அதில், "கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அளிக்கப்பட்டப் புகாரின் அடிப்படையில், எனது வீட்டுக்குள் அத்துமீறி குளச்சல் காவல் நிலைய அலுவலர்கள் நுழைந்தனர். அதுமட்டுமின்றி, என்னை மிரட்டி பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்த மாட்டேன் என எழுதி வாங்கிக் கொண்டனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நான்கு வாரங்களில் 25 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் இந்திய அரசியல் சாசனத்தின் மத சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு, அறிவுறுத்த அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details