சென்னை:சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு தேசிய சுகாதார இயக்கத்தில் தற்காலிக பணியும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் 420 சதுரடி உள்ள வீடு ஒன்றும் முதலமைச்சரால் வழங்கப்பட்டுள்ளது என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கியும், இளநிலை சித்த மற்றும் ஆயுர்வேதா படிப்பிலுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கால்பந்து வீராங்கனை பிரியாவின் இழப்பு ஈடு செய்ய முடியாது எனவும்; அதற்காக எத்தனை கோடிகள் கொடுத்தாலும் ஒப்பாகாது எனவும் தெரிவித்தார்.
மேலும் பிரியாவின் வீட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நான்கு மாடி படியில் ஏறி, பிரியாவின் படத்தினைப் பார்த்தவுடன் அவரது குடும்பத்திற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 420 சதுர அடி அளவிலான வீடு ஒன்று ஒதுக்கீடு செய்து உத்தரவை வழங்கியதாகவும், அவரது சகோதரர் ஒருவருக்கு தேசிய சுகாதார இயக்கத்தில் தற்காலிக வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும் முதலமைச்சர் நேரில் வந்ததைக் கண்டு அவரது குடும்பத்தினர் மிகவும் நெகிழ்ந்துவிட்டதாகவும் கூறினார். அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கு குறிப்பிட்ட அளவு இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை; என்றாலும், மகப்பேறு மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஆய்வு மேற்கொள்ளப்படுவது போல் அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கும் சிகிச்சைக்குப் பின்னர் ஆய்வு மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
உயிரிழந்த பிரியா குடும்பத்திற்கு முதலமைச்சர் அளித்த நிவாரணம்- மா.சுப்பிரமாணியன் இதையும் படிங்க:பிரியாவுக்கு அஞ்சலி - நேரில் சென்று நிவாரணம் வழங்கிய முதலமைச்சர்...