தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் - முதலமைச்சர் - மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்

முதலமைச்சர்
முதலமைச்சர்

By

Published : Feb 1, 2021, 10:21 AM IST

Updated : Feb 1, 2021, 2:07 PM IST

10:14 February 01

தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுவதும் உச்ச வரம்பின்றி இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

ஜனவரி மாதம் பெய்த கனமழையால் பாதிப்பிற்குள்ளான 6,81,334.23 ஹெக்டேர் பயிர்களுக்கும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் ரூ.1,116 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

சுமார் 11.43 லட்சம் விவசாயிகளுக்கு மத்திய அரசின் நிதியுதவியை எதிர்நோக்கி நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மானாவரி, நீர்ப்பாசன வசதிபெற்ற நெற்பயிர்களுக்கான இடுபொருள் நிவாரணம் 20 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பு, நெற்பயிர் தவிர, அனைத்து மானாவரி பயிர்களுக்கான இடுபொருள் நிவாரணம் 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்லாண்டு கால பயிர்களுக்கான இடுபொருள் நிவாரணம் 25 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிவாரணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதே சமயம், மத்திய குழுவும் வரும் பிப்ரவரி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களைப் பார்வையிடும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மானாவாரி மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்ற நெற்பயிர்களுக்கும், நீர்ப்பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் எக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணத் தொகையான 13,500 என்பதை 20,000 உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாட்டில் ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையின் காரணமாக கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை தற்காலிகமாக சீரமைக்கவும், பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் 734.49 கோடி ரூபாயும், கட்டமைப்புகளை நிரந்தரமாக சீரமைக்க 166.33 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 900.82 கோடி ரூபாய் தேவைப்படும் என மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு, மத்திய அரசின் நிதி உதவி கோரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2021 ஜனவரி மாதத்தில் பெய்த கன மழை மற்றும் மிக கன மழையின் காரணமாக, அறுவடை நிலையில் இருந்த நெற்பயிர்களும், இதர பயிர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள வயல்களில் போர்க்கால இழப்பை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட அடிப்படையில், கணக்கெடுப்புப் பணியினை மேற்கொள்வதற்கு வேளாண் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.


இதன் அடிப்படையில், ஜனவரி மாதத்தில் பெய்த கன மழை மற்றும் மிக கன மழையின் காரணமாக 6,62,689.29 எக்டேர் வேளாண் பயிர்களும் 18,644.94 எக்டேர் தோட்டக்கலைப் பயிர்களும், ஆக மொத்தம் 6,81,334.23 எக்டேர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
*மானாவாரி மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்ற நெற்பயிர்களுக்கும், நீர்ப்பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் எக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணத் தொகையான 13,500 என்பதை 20,000  உயர்வு
*மானாவாரி நெற்பயிர் தவிர , அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையான எக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் 7,410 ரூபாய் என்பதை  10,000 ரூபாயாக உயர்த்தியும்
*பல்லாண்டு கால பயிர்களுக்கு ( Perennial Crops ) இடுபொருள் நிவாரணத் தொகையாக எக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் 18,000 என்பதை 25,000  ரூபாயாக உயர்த்தியும் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.


மேலும், தேசிய பேரிடர் நிவாரண வழிகாட்டு நெறிமுறைகளின்படி , பாதிப்பிற்குள்ளான விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 எக்டேர் என்ற அளவில் மட்டுமே இடுபொருள் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற உச்சவரம்பைத் தளர்த்தி, பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுவதற்கும் உச்சவரம்பின்றி இடுபொருள் நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதன்படி , ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் பெய்த கன மழையின் காரணமாக , பாதிப்பிற்குள்ளான 6,81,334.23 எக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு, சுமார் 11.43 லட்சம் விவசாய பெருமக்களுக்கு , 1,116.97 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரணமாக மத்திய அரசின் நிதியுதவியை எதிர்நோக்கி வழங்கப்படும்.

Last Updated : Feb 1, 2021, 2:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details