தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிகரெட் மற்றும் புகையிலைப்பொருட்கள் குறித்த புகார்களுக்கு டோல் ஃபிரீ எண்கள் வெளியீடு - trending news in tamil

தமிழ்நாட்டில் சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் குறித்த விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க மத்திய, மாநில அரசுகள் கட்டணமில்லா தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது.

E-cigarettes ban
E-cigarettes ban

By

Published : Dec 16, 2022, 9:54 AM IST

சென்னை:தமிழ்நாட்டில் சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் தடுப்புச் சட்டத்தின்படி விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்கவும், மற்றும் புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆலோசனைகளைப் பெறுவதற்கும் மத்திய அரசின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணாக 1800112356 என்ற எண்ணும், தமிழ்நாடு அரசின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணாக 104 என்ற எண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பொது மக்கள் தொடர்பு தொடர்புகொண்டு தங்களின் புகார்கள் குறித்து தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழ்நாட்டில் புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டத்தில் ஓர் முக்கிய அம்சமாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் எலக்ட்ரானிக் சிகரெட்களை (E-Cigarettes) தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

ABOUT THE AUTHOR

...view details