தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் - தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நந்தகுமார் செய்து குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதி, அப்பதவிகளுக்கான அறிவிப்பின் போது வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு - நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
2008-2020ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பல்வேறு துறை பதவிகளில் 733 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு 2019 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற தேர்வில் 52 ஆயிரத்து 206 தேர்வர்கள் எழுதினர். இவர்கள் தங்கள் சான்றிதழ்களை ஒன்பதாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
2015-2016ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொதுப்பணி மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான அரசு நிறுவனத்தின் திட்ட அலுவலர், தமிழ்நாடு சிறை பணி உதவியாளர் பதவி ஆகியவற்றில் 3 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு 2019 டிசம்பர் 21ஆம் தேதி தேர்வு நடைபெற்ற தேர்வினை 86 பேர் எழுதினர். இவர்களில் தகுதிப்பெற்ற 9 தேர்வர்களுக்கு நேர்காணல் வரும் 16-ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழ்நாடு சிறை பணி சிறை அலுவலர் பதவியில் ஒரு பணியிடத்தை நிரப்ப வதற்கான தேர்வு 2019 டிசம்பர் 22ஆம் தேதி நடைபெற்றது. அதில் 548 பேர் எழுதினர். நபர்கள் வரும் 9ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தங்களுக்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.