இது குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாட்டில் 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் 3 கோடியே 1 லட்சத்து 12 ஆயிரத்து 370 பேரும், பெண்கள் 3 கோடியே 9 லட்சத்து 25 ஆயிரத்து 603 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 6 ஆயிரத்து 385 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
புதிதாக 2 லட்சத்து 8 ஆயிரத்து 413 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆண்கள் 1 லட்சத்து ஆயிரத்து 700 பேர், பெண்கள் 1 லட்சத்து 6 ஆயிரத்து 581 பேர், மூன்றாம் பாலினத்தவர் 132 பேர்.
கோவை புதிய வாக்காளர்களை அதிகம் கொண்ட மாவட்டமாக உள்ளது. அங்கு மொத்தம் 15 ஆயிரத்து 165 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். குறைவான புதிய வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக அரியலூர் உள்ளது. அங்கு மொத்தம் ஆயிரத்து 22 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மொத்தம் 13 லட்சத்து 75 ஆயிரத்து 198 பேர் உள்ளனர். 80 வயதுக்கு மேல் அதிகபட்சமாக சென்னையில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 344 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 557 பேரும் உள்ளனர்.
அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தொகுதியாக சோளிங்கநல்லூர் உள்ளது. அங்கு மொத்தம் 6 லட்சத்து 55 ஆயிரத்து 366 பேர் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 3 லட்சத்து 29 ஆயிரத்து 420 பேர். பெண்கள் 3 லட்சத்து 25 ஆயிரத்து 858 பேர். மூன்றாம் பாலினத்தவர் 88 பேர்.