தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு - சென்னை

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் வெளியிட்டார்.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு

By

Published : Aug 16, 2022, 2:09 PM IST

சென்னை:கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் 2022-23ஆம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று (ஆக. 16) வெளியிட்டார்.

இந்தாண்டு அதிகம்: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, "2022-23ஆம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை விட அனைத்து பிரிவிலும் விண்ணப்பித்தோர் இந்தாண்டு அதிகம். இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர மொத்தம் 2 லட்சத்து 11 ஆயிரத்து 905 மாணவர்கள் விண்ணப்பித்தனர் . கடந்த ஆண்டை காட்டிலும் 36 ஆயிரத்து 900 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பித்தவர்களில் பதிவு கட்டணத்தை 1 லட்சத்து 69 ஆயிரத்து 80 மாணவர்கள் செலுத்தினர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காட்டில் அரசு பள்ளி மாணவர்களில் 22,587 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டு பிரிவில் 3 ஆயிரத்து 102 விண்ணப்பம் பெறப்பட்டு 1,875 மாணவர்கள் சான்றிதழ் சரிபார்க்ப்ப்பட்டு 1,258 மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது.

ரேண்டம் எண் இல்லை: மாற்றுத்திறனாளி மாணவர்கள் 203, முன்னாள் ராணுவத்தினர் வாரிசு 970 மாணவர்களுக்கு தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்கின்றன. அவற்றில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாகும்.

ஒரே மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான தரவரிசையில் அரசின் புதிய வழிகாட்டுதல்படி 12ஆம் வகுப்பு மதிப்பெண்ணுடன், 10ஆம் வகுப்பு மதிப்பெண்ணும் கணக்கில் கொள்ளப்பட்டதால் ஒரு மாணவருக்கு கூட இந்த ஆண்டு சமவாய்ப்பு எண்ணுக்கான (Random number) தேவை ஏற்படவில்லை.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு

குறைகளை தீர்க்க 4 நாள்கள்: தரவரிசை பட்டியலில் பெயர் விடுபட்ட மாணவர்கள், இன்று (ஆக. 16) முதல் 4 நாள்களுக்கு (ஆக. 19 வரை) அருகில் உள்ள தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கை சேவை மையத்தை (TFC's) நாடலாம். மாணவர்கள் கூறும் குறைகளில் நியாயம் இருப்பின் நிவர்த்தி செய்யப்படும்.

6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்றாலும், 7.5 விழுக்காடு வேண்டி விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களும் ஆக. 19ஆம் தேதிவரை தமிழ்நாடு மாணவர்கள் பொறியியல் சேர்க்கை சேவை மையம் சென்று தங்களை அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் தங்களை இணைத்து கொள்ளலாம்.

10 பேர் 200க்கு 200:இந்த மாணவர்களுக்கு அவர்கள் பெறும் இடத்தில் A, B, C என்ற வரிசையில் தர வரிசையில் இணைத்து கொள்ளப்படுவர். உதாரணத்திற்கு 7.5 ஒதுக்கீட்டில் 50ஆவது இடம் பெறும் மாணவர் தாமதமாக 4 நாளுக்குள் தன்னை இணைத்து கொண்டால் அவருக்கு 50A, 50B என வழங்கப்படும். இதன் மூலம் 50ஆவது இடத்தில் தற்போது உள்ள நபருக்கு அடுத்ததாகவும் 51ஆவது இடத்தில் உள்ளவருக்கு முன்பாகவும் நேர்முகத் தேர்வில் இந்த மாணவர் கலந்து கொள்ள முடியும்.

தொழில்நுட்ப கல்வி இயக்க அழைப்பு மையத்தின் எண்ணான 18004250110-ல் மாணவர்கள் தங்களது கேள்விகளை கேட்டு தெளிவுபெறலாம். பொறியியல் தரவரிசை பட்டியலில் ரஞ்சிதா, (SNSM higher sec school) முதலிடம் பெற்றுள்ளார். தமிழ்நாட்டு மாணவியான இவர் கேரளாவில் பயின்று இங்கு விண்ணப்பித்துள்ளார். ஒரு மாணவர் இந்தியாவில் எங்கு பயின்றாலும் தமிழ்நாட்டு இருப்பிடச் சான்று வழங்கினால் தமிழ்நாட்டில் பொதுப்பிரிவு பட்டியலில் இடம்பெற்று உயர் கல்வியில் அவர் சேரலாம்.

ஹரினிகா (அவ்வை பள்ளி, ஜடையாம்பட்டி, தருமபுரி) இரண்டாம் இடமும், லோகேஷ் கண்ணன் (வேலம்மாள் மெட்ரிக்பள்ளி, திருவள்ளூர்) மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர். தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்கள் பெற்ற மாணவர்கள் அனைவரும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். முதலமைச்சர் அறிவித்தபடி பொறியியல் மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் விரைவில் வெளியாக உள்ளது" என்று கூறினார்.

இதையும் படிங்க:'வென்ற ஏழையின் வைராக்கியம்':சாம்சங் நிறுவனத்தில் ரூ.21 லட்சம் ஆண்டு ஊதியத்துடன் பணிபெற்ற பி.இ.பட்டதாரி

ABOUT THE AUTHOR

...view details