சென்னை : தேர்வுத் துறை வெளியிட்ட அரசாணையில், 2020-21ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதுவதற்கு 2022ஆம் ஆண்டில் விண்ணப்பித்த பள்ளி மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று (ஆக.23) முதல் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவித்திருந்தனர்.
மதிப்பெண் பட்டியல் வெளியீடு அதனடிப்படையில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களுக்கு உரிய மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் படித்த பள்ளிகளில் இருந்து பதிவிறக்கம் செய்துகொண்டனர். சென்னை எழும்பூரில் உள்ள பிரசிடென்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொண்டனர்.
அனைத்து மாணவர்களும் தேர்ச்சி
கரோனா தொற்றின் காரணமாக 2020-21 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்தல் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் ஒவ்வொரு பாடத்திற்கும் தேர்ச்சி என பதிவிட்டு மதிப்பெண் சான்றிதழை வழங்க அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் அரசு தேர்வுத் துறையால் வழங்கப்பட்டுள்ளது.
மதிப்பெண் பட்டியல் வெளியீடு இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2020-21ஆம் கல்வி ஆண்டில் படித்து மார்ச் 2021ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 11 மணி முதல் 31ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மாணவர்களுக்கு பிறந்த தேதி, தேர்வு எண் ஆகியவை அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அரசு தேர்வுத்துறையால் ஆகஸ்டு 21ஆம் தேதி காலை 11 மணிக்கு அனுப்பி வைக்கப்படும்.
மதிப்பெண் சான்றிதழ்கள் பதிவிறக்கம்
பள்ளி மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தமிழுக்கான பதிவு எண்,பிறந்த தேதி ஆகிய விபரங்களை பதிவு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் அனைத்து பள்ளிகளும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : சிறார்கள் கவனம் - அக்டோபரில் மூன்றாம் அலை அபாயம்?