சென்னை:தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இரண்டாவது நாளாக இன்று (அக்.10) நடைபெற்று வருகிறது. இதில் நீண்ட காலம் சிறையில் உள்ள இஸ்லாமியர்கள் விடுதலை குறித்து இன்றைய சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரபட்டது. இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ஆயுள் சிறைவாசிகளாக சிறையில் அடைபட்டுள்ளோரை விரைவில் விடுவிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் சிறப்பு கவன ஈர்ப்பில் எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அந்த கருத்துகளுக்கு எந்த மாறுபாடுகளை, வேறுபாடுகளை நாங்கள் எடுத்துச் சொல்லவில்லை. முழு மனதோடு அவற்றை ஏற்க தயாராக உள்ளோம். தமிழ்நாடு சிறைவாசிகளில் 10, 20 ஆண்டு தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள், நோயுடனும், மன நலனும் குன்றி இருப்போர் நிலையை மனிதாபிமான அடிப்படையில் ஆராய ஓய்வு பெற்ற நீதியரசர் என்.ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.