துணை ஆட்சியர், உதவி காவல் கண்காணிப்பாளர், வணிகவரித் துறை உதவி ஆணையர் உள்ளிட்ட ஆறு துறைகளில் உள்ள 66 காலி பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜனவரி 3ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.
இந்தத் தேர்வில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினர். இந்நிலையில் இன்று (பிப்.9) இத்தேர்வுகளுக்கான முடிவுகளை www.tnpsc.gov.in இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம். அதனைத்தொடர்ந்து வருகின்ற மே 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வுகள் நடைபெறும் என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இந்த முதன்மைத் தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் வருகின்ற பிப்ரவரி 16ஆம் தேதி முதல் மார்ச் 3ஆம் தேதி வரை தங்களுடைய சான்றிதழ்களை மாநிலம் முழுவதும் உள்ள இ-சேவை மையங்களில் 200 ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவேற்றம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூடுதல் தகவலாக ஒருங்கிணைந்த பொறியியல் பணியில் அடங்கிய பல்வேறு துறைகளுக்கான பதவிகளில் 22 நபர்களை தேர்வு செய்வதற்கு பிப்ரவரி 25ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்த விபரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க:வரலாறு காணாத வகையில் ரூ.90-ஐ தொடும் பெட்ரோல் விலை