சென்னை: ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நித்தம் ஒரு வானம்' திரைப்படம் வருகிற நவம்பர் 4ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட ஃபீல் குட் படங்கள் எப்போதும் சினிமா பார்வையாளர்களின் முதல் தேர்வாக இருக்கும். அந்த வகையில், தமிழ் சினிமாவில் முக்கியமான கதையாக 'நித்தம் ஒரு வானம்' உலகம் முழுவதும் திரையரங்குகளில் நவம்பர் 4ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தினை ரா.கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், வயாகாம் 18 உடன் இணைந்து தயாரித்து இருக்கிறது. படத்தில் அசோக்செல்வன், ரித்துவர்மா , அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ஆகியோர் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.