சென்னையைச் சேர்ந்த 16 வயதான சிறுமி ஒருவர், தற்போது 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். சமீப காலமாக ஆண்களை கண்டாலே சிறுமிக்கு உடல் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அச்சத்துக்கான காரணம் குறித்து பெற்றோர், சிறுமியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அப்போது 5ஆம் வகுப்பு படிக்கையில் பெரியப்பா முறை கொண்ட உறவினர் ஒருவர் தன்னை பல முறை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதிலிருந்தே உடல் நடுக்கம் வந்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமிக்கு தைரியமளித்து நடந்தவை குறித்து கேட்டுள்ளனர். அப்போது உறவினரின் வீட்டு மாடிக்கு பூப்பறிக்க சென்றபோது பலமுறை பாலியல் வன்புணர்வுக்குள்ளானதாக சிறுமி தெரிவித்துள்ளார்.