தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

18 பிளஸ்க்கு கரோனா தடுப்பூசி - பதிவு குறித்தான வழிமுறைகள் வெளியீடு! - கரோனா தடுப்பூசி பதிவு குறித்தான வழிமுறைகள்

சென்னை: 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு செய்வது எப்படி என்பது குறித்தான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

vaccine
vaccine

By

Published : Apr 23, 2021, 2:48 PM IST

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவிவரும் நிலையில், மே1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளது. தடுப்பூசி போட்டு கொள்ள பதிவு செய்து கொள்ள வழிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.

முதலில் cowin.gov.in என்ற இணையப்பக்கத்திற்கு சென்று 'register/sign in yourself'என்பதை 'க்ளிக்' செய்யவும், உங்களுடைய 10 இலக்க மொபைல் எண் அல்லது ஆதார் எண்ணை டைப் செய்யவும். அதன்பின் உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் 'OTP'-யை டைப் செய்யவும்.

உங்களுடைய விவரங்களை பதிவு செய்த பிறகு, தடுப்பூசி போட்டுக் கொள்ள நீங்கள் விரும்பும் தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிடவும். தடுப்பூசி செலுத்திக் கொண்டபிறகு, உங்களுக்கு குறிப்பு ஐடி( Reference ID) ஒன்று கொடுக்கப்படும். அதை வைத்து, தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஒட்டுநர் உரிமம், சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை அடையாள அட்டை, எம்.பி/எம்.எல்.ஏ/எம்.எல்.சி வழங்கிய அடையாள அட்டை, பாஸ்போர்ட், பாஸ்புக் (வங்கி/ அஞ்சலகம்), ஓய்வூதிய அட்டை, மத்திய / மாநில அரசு / பொது நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சேவை அடையாள அட்டை போன்ற மேற்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வைத்து பதிவு செய்து கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details