தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சார்பதிவாளர் அலுவலகங்கள் குறித்த செய்திகள்: தமிழ்நாடு ஆவணப்பதிவகம் பதில் - தமிழ்நாடு ஆவண பதிவு

சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்கள் குறித்து சில ஊடகங்களில் வெளியாகியுள்ள உண்மைக்குப் புறம்பான செய்திக்கு தமிழ்நாடு ஆவணப்பதிவகம் பதில் அளித்துள்ளது.

ஆவணப்பதிவு
ஆவணப்பதிவு

By

Published : Jun 16, 2020, 6:32 AM IST

Updated : Jun 17, 2020, 6:20 AM IST

இது குறித்து ஆவணப்பதிவகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "ஆவணப்பதிவு படிப்படியாக அதிகரித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் 1000-க்கு குறைவான ஆவணங்களே பதிவுசெய்யப்பட்ட நிலையில், தற்போது நாளொன்றிற்கு சராசரியாக 10 ஆயிரம் ஆவணங்கள் பதிவுசெய்யப்படுகின்றன.

ஜூன் 10ஆம் தேதி 12 ஆயிரத்து 883 ஆவணங்கள் மூலம் ரூ.50 கோடி, ஜூன் 11ஆம் தேதி ஒன்பதாயிரத்து 674 ஆவணங்கள் மூலம் ரூ.36 கோடி, ஜூன் 12ஆம் தேதி 10 ஆயிரத்து 814 ஆவணங்கள் மூலம் ரூபாய் 38 கோடி வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது.

சார்பதிவாளர் அலுவலகங்களில் தினந்தோறும் 1000-க்கு குறைவான ஆவணங்கள் பதிவு ஆவதாகவும் 50 பணியாளர்களுக்கு மேல் கோவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் சில ஊடகங்களில் வெளியாகி உள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும்.

கோவிட் 19 தொற்று ஏற்படாத வண்ணம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கிவருகின்றன எனப் பதிவுத் துறைத் தலைவர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

ஆவணப் பதிவிற்காகப் பொதுமக்கள் ஒரு மண்டலம் விட்டு வேறொரு மண்டலத்திற்குப் பயணம் மேற்கொள்ளும்போது எவ்வித இடர்ப்பாடும் இன்றி பயணம் மேற்கொள்வதற்கு வசதியாகப் பதிவுசெய்ய கொண்டுசெல்லும் ஆவண நகலை இ-பாஸ் ஆக பயன்படுத்திக் கொண்டு சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பயணம் மேற்கொள்ள மே 31ஆம் தேதிமுதல் அரசு அனுமதித்துள்ளது.

மேலும் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரு ஆவணம் பதிவு முடிந்து அதற்குரிய நபர்கள் வெளியே சென்ற பிறகு அடுத்த ஆவணத்திற்கான நபர்கள் உள்ளே அழைக்கப்படுகின்றனர்.

தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வண்ணம் குறியீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கைரேகை பெறுவதற்கு முன்பு அவர்களின் கைகள் சானிடைசர் கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது.

சார்பதிவாளர் அலுவலகப் பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளி இருக்கும் வண்ணம் மேசை, கைரேகை பெறும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அலுவலகத்திற்கு வரும்போது கைகளைச் சுத்தப்படுத்த உரிய வசதியும் தனித்தனியாக இடைவெளிவிட்டு உட்காரும் வண்ணம் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஆகவே சார்பதிவாளர் அலுவலகம் வருவதால் பொதுமக்களுக்கு எந்தவித கோவிட் 19 தொற்றுகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பாகப் பதிவுப் பணி மேற்கொள்ளப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Last Updated : Jun 17, 2020, 6:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details