தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மண்டலப் போக்குவரத்து அலுவலர்கள் இடமாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு - regional transport officers transferred

சென்னை: தமிழ்நாட்டில் ஆறு மண்டலப் போக்குவரத்து அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

secertariat
secertariat

By

Published : Jun 12, 2020, 8:17 PM IST

அதன்படி, மதுரை தெற்கு ஆர்டிஓ கருப்பசாமி, மாநில போக்குவரத்து ஆணையத்தின் உதவி செயலாளராக சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

தெற்கு மண்டல இணை போக்குவரத்து ஆணையத்தின் ஆர்டிஓ பிரபாகரன், மாநில போக்குவரத்து மேல்முறையீடு தீர்ப்பாயத்தின் செயலாளராகவும், திருச்சி கிழக்கு ஆர்டிஓ பாண்டியன் தீர்ப்பாயத்தின் துறை பிரதிநிதியாகவும் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை (மத்தியம்) ஆர்டிஓ அசோக்குமார் மாநில போக்குவரத்து ஆணையத்தின் உதவி செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். ராமநாதபுரம் ஆர்டிஓ செல்வகுமார் மாநில போக்குவரத்து ஆணையத்தின் உதவி செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

மாநில போக்குவரத்து மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் பிரதிநிதி பாஸ்கரன் செங்கல்பட்டு ஆர்டிஓவாக மாற்றப்பட்டார். ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ சுதாகர், தாம்பரம் ஆர்டிஓவாக மாற்றப்பட்டுள்ளார். ஈரோடு மேற்கு ஆர்டிஓ ரகுபதி, ஆத்தூர் ஆர்டிஓவாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

ABOUT THE AUTHOR

...view details